மேஷராசி
இன்றைய நாளில் தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
ரிஷபராசி
இன்றைய நாளில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிப்பு கூடும். தைரியம் கூடும் நாள்.
மிதுனராசி
இன்றைய நாளில் குடும்பத்தாரை அனுசரித்து செல்வது அவசியம். நவீன மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.பிரச்னைகள் வெகுவாக குறையும். வியாபாரத்தில் பற்றுவரவு கணிசமாக உயரும். நல்லன நடக்கும் நாள்.
கடகராசி
இன்றைய நாளில் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
சிம்மராசி
இன்றைய நாளில் குடும்பத்தினருடன் கோபத்தை காட்டாதீர்கள். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்.
கன்னிராசி
இன்றைய நாளில் குடும்பத்தினர் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எண்ணங்கள் நிறைவேறும் நாள்.
துலாராசி
இன்றைய நாளில் உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சாதிக்கும் நாள்.
விருச்சிகராசி
இன்றைய நாளில் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.
தனுசுராசி
இன்றைய நாளில் சந்திராஷ்டமம் இருப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
மகரராசி
இன்றைய நாளில் பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். கனவு நனவாகும் நாள்.
கும்பராசி
இன்றைய நாளில் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
மீனராசி
இன்றைய நாளில் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். புதுமை படைக்கும் நாள்

