திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் புதிய திட்டங்களுடன் பொது மக்களை ஏமாற்றி தங்களது கொள்ளையை சாமர்த்தியமாக நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

அதன்படி, நேற்று திங்கட்கிழமை பியகம பகுதியில் திருட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில், பொலிஸ் அதிரடிப் படையினர் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு மர்மக் கும்பலொன்று வீடொன்றுக்குள் புகுந்துள்ளது.

அங்கு 58,000 ரூபா பணம், 4 கை தொலைபேசிகள் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

குறித்த கொள்ளையர்கள் சிவில் உடையில் குறித்த வீட்டிற்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இச் சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் ஐவருக்கும் போதைப் பொருள் பாவனை உண்டென ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here