வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது லொறியொன்று மோதியதில் காவற்துறை சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு (04) கொழும்பு – பழைய கெஸ்பேவ வீதியில் உள்ள கட்டிய சந்தியில் இருந்து தெல்கந்த நோக்கி பயணித்த லொறி ஒன்றே இவ்வாறு மோட்டார் சைக்கிளை மோதியது.

விபத்தில் உயிரிழந்தவர் மருதானை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த புளத்சிங்கள பகுதியில் வசிக்கும் 47 வயது காவற்துறை சார்ஜன்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here