கண்டியில் இன்று அதிகாலை ஒரு சுற்றுலா ஹோட்டலில் சட்டத்தரணிகள் குழு கலந்து கொண்ட விருந்தில் ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
காவல்துறையினரின் கூற்றுப்படி,
குறித்த நிகழ்வில் ஒரு வழக்கறிஞரின் இரண்டு உறவினர்களுக்கும் ஹோட்டல் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக உருவாகி உள்ளது.
இதில் காயமடைந்தவர்களில் இரண்டு பேர் ஹோட்டல் ஊழியர்களும் உள்ளனர்.
அத்துடன் இவர்கள் சிகிச்சைக்காக கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிசார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்த மோதலில் ஹோட்டல் உபகரணங்களும் கடுமையாக சேதமடைந்தன



