Maithripala Sirisena

நாட்டில் இம்முறை மே தினத்தை தனியே கொண்டாடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையிலான சுதந்திரக்கட்சி தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கமைவாக, இந்த முடிவினை வரும் 19ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்துகின்ற பேச்சுவார்த்தையில் தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

வருகின்ற மே முதலாம் திகதி உள்ள மே தினக் கொண்டாட்டத்தை மைத்திரியின் சொந்த ஊராகிய பொலன்னறுவையில் நடத்த சுதந்திரக்கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் குறித்த தீர்மானம் எந்த சந்தர்பத்திலும் மாற்றம் பெறாது என்றும் அக்கட்சி தகவல்கள் கூறுகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here