பியகம பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வியாபார ஸ்தலமும் வீடும் மின் ஒழுக்கு காரணமாக தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்தன.
பியகம பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான மல்வானையைச் சேர்ந்த ஹசன் என்பவருக்கு சொந்தமான வீடே எரிந்துள்ளது.
தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் பாரிய முயற்சி செய்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தினால் பல கோடி ரூயாய் பெறுமதியான பொருட்கள் மற்றும் உடைமைகள் எரிந்து நாசமாகியுள்ளன.
எவ்வாறாயினும், குறித்த சம்பவத்தில் தெய்வாதீனமாக எவ்விதமான உயிர்சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



