திருகோணமலை மாவட்டத்தில் கோவிட் 19 வைரஸ் பரவுவதற்கான அதிகளவு சாத்தியக்கூறு இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக திருகோணமலை மாவட்ட பிரதி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வி. பிரேமானந்த் இன்று (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இம்மாதத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 310 கொரோணா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
விஷேடமாக கடந்த 24 மணித்தியாலங்களில் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17, திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15, தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3, மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1, குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1, கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9, அடங்கலாக திருகோணமலை மாவட்டத்தில் 46 கொரோணா தொடர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
எனவே, அவசர விஷயத்தைத் தவிர்த்து வெளியே செல்ல வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்.
எதிர்காலத்தில் திருகோணமலையில் சிறப்பு பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்துமாறு பாதுகாப்புப் படையினருக்கும் ஆளுநர் அறிவுறுத்தினார்.
தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையான சட்டங்களை அமல்படுத்துமாறும் ஆளுநர் பாதுகாப்புப் படையினருக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



