ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் இடையில் இன்று (26) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு இன்று முற்பகல் 11 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

சந்திப்பிற்கு முன்னர் தமது கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுடன் தாம் சந்திப்பொன்றை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

ஜனாதிபதியுடன் எவ்வாறான விடயங்களை கலந்துரையாடுவது என்பது தொடர்பில் இந்த சந்திப்பில் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

தமது கட்சி, ஆளும் கட்சியுடன் சில உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவித்த அவர்,  அந்த உடன்படிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here