யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் இன்றிரவு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த அடையாளம் தெரியாத 4 பேர் அடங்கிய குழுவொன்று, மருதனார்மடம் பகுதியில் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியதை அடுத்தே, இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தை அடுத்து, மருதனார்மடம் பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.



