பஹன்துடாவ பாலியல் காணொளி விவகாரம் தொடர்பில், அந்த சம்பவத்துடன் தொடர்புப்படாத தம்பதிகளில் படமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வூ பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கூறி, வேறொரு தம்பதிகளின் படமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை தொடர்பில், பாதிக்கப்பட்ட தரப்பினர் முன்வைத்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்..

தவறான படமொன்றை பகிர்ந்து, குறித்த தம்பதிகளின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள்1 ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here