நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 25 பேர் நேற்று (16) இனங்காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 23 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களென, இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஏனைய இருவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றிலிருந்து, நேற்று (16) 43 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



