இலங்கை விமானப்படை சிப்பாயான ரொஷான் அபேசுந்தர, புதிய ஆசிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.
பாக்கு நீரிணையை இரண்டு தடவைகள் நீந்தி கடந்து, ரொஷான் அபேசுந்தர இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
தலை மன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கு கடலில் நீந்தி சென்று, மீள வருகைத் தருவதற்கு ரொஷான் அபேசுந்தரவிற்கு, 28 மணித்தியாலங்களும், 19 நிமிடங்களும், 58 செக்கன்களும் பிடித்துள்ளன.
60 கிலோமீற்றர் தூரம் ரொஷான் அபேசுந்தர, நீந்தி இந்த சாதனையை புரிந்துள்ளார்.



