இலங்கையில் பதிவான மொத்த கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 890 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வந்த கொழும்பு மாவட்டத்தில் , நேற்று சனிக்கிழமை தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்துள்ளது.
மேலும், கொழும்பு மாவட்டத்தில் நேற்று 40 தொற்றாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் தொற்றாளர்கள் குறைவடைந்தாலும், யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அத்தோடு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78,373 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் பதிவாகிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 464 என்பதும் குறிப்பிடத்தக்கது.



