mulaithivu

முல்லைத்தீவில் நேற்று முன்தினம் மாலை வீசிய கடும் காற்றினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம், பனிக்கன்குளம், கிழவன்குளம், பகுதிகளிலேயே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இப் பகுதிகளில் கன மழை பொழிந்தது. இதன்போது திடீரென வீசிய கடும் காற்று காரணமாக பல வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன.

வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டு, மழைநீர் புகுந்து பல பொருட்களும் நாசமாகியுள்ளன. கிழவன்குளம் பகுதியில் ஒருவருடைய கோழிப் பண்ணையில் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்து கோழிக்கூடு சேதமடைந்துள்ளதோடு கோழிகள் பல உயிரிழந்துள்ளன.

இந்நிலையில் இப் பகுதிகளின் சேத விபரம் தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் ஆராய்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here