நாட்டில் கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் 29 விமானங்கள் ஊடாக  2 ஆயிரத்து 253 பேர் பயணித்துள்ளனர்.

இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணித்தியால காலப்பகுதியில் குறித்த பயணங்கள்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர  பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த ஆயிரத்து 317 இலங்கையர்கள் 14 விமான சேவைகள் ஊடாக நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இதன்படி, சவுதி அரேபியாவில் இருந்து 155 பேரும், மாலைத்தீவில் இருந்து 97 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ள அனைவரும் இராணுவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக சுற்றுலா ஹோட்டல்களில்  தங்கைவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 15 விமான சேவைகள் ஊடாக 936 பேர் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here