கிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளுடன் தாயொருவர் கிணற்றில் குதித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

தற்போது, குறித்த தாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் மூன்று பிள்ளைகளும் உயிரிழந்து விட்டதாகவும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் இடம்பெற்றதோடு, காணாமல் போயிருந்த இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துவிட்டதாக தற்போது எமது செய்தி தொடர்பாளர் உறுதி செய்திருந்தார்.

தனது மூன்று பிள்ளைகளுடன் தாய் ஒருவர் நேற்று பிற்பகல் கிணற்றில் குதித்த நிலையில், குறித்த தாய் உயிருடன் மீட்கப்பட்டத்தோடு ஒரு பிள்ளை சடலமாக மீட்கப்பட்டிருந்தது.

பின்னர் காணாமல் போயிருந்த மற்றைய இரு பிள்ளைகளும் தேடப்பட்டு வந்தநிலையில் இன்று முற்பகல் அவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் 2, 5 மற்றும் 8 வயதுகளை உடைய பிள்ளைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

காப்பாற்றப்பட்ட தாய் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நீதிமன்ற அனுமதியுடன் இன்றைய தினம் சடலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here