திருமதி அழகுராணிப் போட்டியில் சர்ச்சை ஏற்பட்டு மீளப் பறிக்கப்பட்ட வெற்றியாளர் கிரீடம் மீண்டும் திருமதி புஷ்பிகா டி சில்வாவுக்கு நாளை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தாமரை தடாக அரங்கில் நடைபெற்ற திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட திருமதி புஷ்பிக்காவிற்கு கிரீடம் அணிவிக்கப்பட்ட பின்னர் அவர் விவகாவரத்து பெற்றவர் எனக்கூறி கிரீடம் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டு இரண்டாவது வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவருக்கு அணிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பிலான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.
திருமதி புஷ்பிகா டி சில்வாவிற்கு சூட்டப்பட்ட மகுடம் மீண்டும் அவரது தலையிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டபோது ஏற்பட்ட காயம் காரணமாக தற்சமயம் கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.



