மஹரகம, பமுனுவ பிரதேசத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த துணிக்கடையில் பணிபுரியும் 46 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த புத்தாண்டு காலத்தில், மஹரகம பமுனுவ பிரதேசத்தில் ஏராளமான மக்கள் பொருட்கள் கொள்வனவு செய்ய கூடியிருந்தனர்.

கடையில ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதோடு, மேலும் தொற்றுக்கு இலக்கான 16 நபர்களும் அடையாளம் காணப்பட்டனர்.

பின்னர், தொற்றாளர்களின் முதல்-நிலை தொடர்பளர்கள் குழிவினை தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள ஒரு அரசு வங்கியின் சுமார் 300 அதிகாரிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

அவர்களில் 35 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. அவர்களில் 18 நபர்கள் நேற்று (19) அடையாளம் காணப்பட்டனர்.

தொற்றாளர்களுடன் நெருங்கிப்பழகிய 600 நபர்களுக்கு இன்று பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், பிலியந்தல பிரதேசத்தில் நடத்தப்பட்ட 130 பி.சி.ஆர் சோதனைகளில் 31 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்கானதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த பகுதிக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரெவ்வல, ரத்மல்தெனிய, போகுந்தர மற்றும் கொரகான ஆகிய பிரதேசங்களில் சுய-தனிமைப்படுத்தலில் இருந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு இலக்காகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here