bus

புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவதற்காக விஷேட போக்குவரத்து சேவைகள் இன்று (15) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலையிலும் பேருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் விஷேட புகையிரத சேவைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் இன்று முதல் புகையிரத சேவைகள் வழமை போன்று இயங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here