இலங்கையில் நான்காவது நாளாகவும் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்றைய தினத்தில் மாத்திரம் 1,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி, நாட்டில் 106,484 பேருக்கு இதுவரை கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்றுவரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,378 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 362 பேர் இன்று (29) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 95,445 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here