நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் இரண்டு வாரங்கள் தீர்மானம் மிக்கதாக அமைந்திருக்கும் என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பொதுமக்கள் வீடுகளிலேயே தங்கியிருப்பதுடன் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என பிரதான தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாளாந்தம் 800 முதல் 900 வரையான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலை மீண்டும் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதன் மூலம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் பிரதான தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தற்போதைய நிலையில் பொதுமக்கள் ஒன்றுகூடுவது பாரிய அச்சுறுத்தலாகும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here