உயிர்த்த ஞாயிறு இடம்பெற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்து விட்டது.
எனினும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரியை அரசாங்கம் மற்றும் பொலிஸார் கண்டுபிடித்து தண்டனை கொடுக்க முடியாத நிலையிலே காணப்படுகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லீம் சமூக மக்கள், பெரிதும் புறக்கணிக்கப்படுவதாக கடந்த கால சம்பவங்களை வைத்து கவலை வெளியிட்டுள்ளனர்.
சஹ்ரான் செய்த இந்த செயலினால் தான் இந்த நாட்டில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு இப்படியானதொரு நிலையென, கும்புருகமுவ தேரர் கூறியுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இளைஞா்களை சிறந்த முறையில் நல்லதொரு சமுதாயமாக அவா்களுக்கு உபதேசம் செய்ய, முஹம்மத் நபி இவ் உலகிக்கு முன்மாதியானவா்.
அவரது வாழ்க்கை முறையை ஒழுங்காகப் பின்பற்றினால் போதும் நாம் சீராக வாழ்வதற்கு.
விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை, இறக்கம். மிக்கவா் என பேராசிரியரும் கடந்த 30 வருடங்களாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் வேந்தராகவும் மருதானை மாளிகாந்தை பிரிவினை பிரதான தேரர் கும்புருகமுவ தேரர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



