முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்

குறித்த விவசாயிகள் நேற்று மாலை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே, இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மழை மற்றும் கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் என நேற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்த சம்பவம் பதிவாகியுள்ளது

சம்பவத்தில் குமுழமுனை மற்றும் வற்றாப்பளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34, 35 மற்றும் 46 வயதுகளையுடைய விவசாயிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here