இந்தியாவில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் பாதாளகுழு உறுப்பினரான அங்கொட லொக்காவுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதாளகுழு உறுப்பினரான அங்கொட லொக்காவுடனான திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரான சீட்டி என அழைக்கப்படும் சரத்குமார இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெரோயின் மோசடி தொடர்பில் முல்லேரியா பகுதியில் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இன்று அதிகாலை குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெலிகம பகுதியில் நூறுகிலோகிராமுக்கும் மேற்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டின் 9 ஆவது சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.



