அநுராதபுரம், நுவரவெவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக பல பகுதிகளுக்கு 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று (13) இரவு 9.00 மணி தொடக்கம் நாளை (14) இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அநுராதபுர நகரம், முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் படிகள், யாழ்ப்பாண சந்தி, குருந்தன்குளம், சாலியபுர, ரபேவ, கல்குளம் மற்றும் மிஹிந்தலை பிரதேசங்களுக்கே இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here