பொதுமக்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுகிறார்களா என்பதை அவதானிக்க கொழும்பில் இன்று விசேட சோதனை நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்காக சுமார் 20 நடமாடும் காவற்துறை வாகனங்களும், 100 சிற்றூர்திகளும், 300 காவற்துறை அதிகாரிகளையும் கடமையி்ல் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்க்பபட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் விஸ்தரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here