அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஒரு வெள்ளை மாளிகை நினைவுகள் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். 

அதில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் தனிப்பட்ட முறையில் 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற உதவுமாறு கேட்டுக் கொண்டதாக தனது புத்தகத்தில் கூறியுள்ளார். புத்தகத்தில் உள்ள தகவல்கள் அமெரிக்க பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. 

இது குறித்து சீனா அமெரிக்க தேர்தலில் தலையிட எந்த எண்ணமும் இல்லை என கூறியுள்ளது. 

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் போல்டனின் புத்தகத்தில் இருந்த தகவல் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது இந்த கருத்துக்களை வெளியிட்டு உள்ளார். 

17 மாதங்கள் டிரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றிய போல்டன், அமெரிக்க ஜனாதிபதியுடனான கருத்து வேறுபாடு காரணமாக கடந்த செப்டம்பரில் பதவியில் இருந்து விலகினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here