ரணிலின் ஆட்சிகாலத்திலிருந்தே கிழக்கில் தொல்பொருட்களை அடையாளமிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதியால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள தொல்பொருட்களை அடையாளமிடும் செயலணி தொடர்பாக சிலர் பல்வேறுபட்ட கருத்துக்களைக் கூறிவருகின்றனர். 

இந்த தொல்பொருட்களை அடையாளமிடும் செயலணி தற்போது வந்த ஒரு விடயமல்ல. 

அது ரணில் அரசாங்கம் ஆட்சியில் இருந்த போதே இருந்த ஒரு விடயம். முன்னைய அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது தமிழர்களின் நூற்றுக்கு மேற்பட்ட இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்படுவதற்காக அடையாளப்படுத்தப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றன. 

எதிர்க்கட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட வரப்பிரசாதங்களை அனுபவித்துக் கொண்டிருந்த கூட்டமைப்பு அப்போது உருப்படியாக வாய் திறக்கவில்லை.

ஆனால் தற்போது ஒருசிலர் இந்த விடயத்தினை பெரிதாக்க முனைகின்றனர்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் மெலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here