யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படையினரால்,  10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பொது மக்களின் காணிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாக, யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

தம்மால் முடியுமான அனைத்த காணிகளையும் இதுவரை விடுவித்துள்ளதாகவும், பொது மக்களின் ஏனைய காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

எனினும் தற்போதைய நிலைமையில் காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். 

அத்துடன், பாதுகாப்பு விடயம் தொடர்பில் தாம் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகவும் , யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய மேலும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here