இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பாருச் (Bharuch) மாவட்டத்திலுள்ள இரசாயன தொழிற்சாலையொன்றில் உலையொன்று வெடித்தமையால் ஏற்பட்ட தீயில் சிக்கி 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கிட்டத்தட்ட 50 தொழிலாளர்கள் வரையில் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, இரசாயன உலை அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.குறித்த பகுதியில் உள்ள கட்டடங்களின் கண்ணாடிகளும் உடைந்துள்ளமை இரசாயன உலையில் ஏற்பட்ட விபத்தின் தீவிரத்தை காட்டுவதாக கூறப்படுகின்றது.



