நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 66 பேர் நேற்று (03) பதிவாகியுள்ளனர்.

35 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகைதந்தவர்கள் என்பதுடன், இவர்களில் 14 பேர் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய 31 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்டாரிலிருந்து வருகைதந்து தனிமைத்தல் நிலையத்தில் இருந்த 19 பேர் இவ்வாறு தொற்றாளர்களாக பதிவாகியுள்ளதுடன், இருவர் குவைட்டில் இருந்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, வைரஸ் தொற்றுக்குள்ளான 902 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருவதுடன், 836 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here