பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இறைச்சிக்காக மாடு வெட்டும் நடவடிக்கை இலங்கையில் நிறுத்தப்பட வேண்டும் என பிரேரணை முன்வைத்துள்ளார்.
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்ட நிலையில் அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதன்படி விரைவில் குறித்த பிரேரணை பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு சட்டமாக்கப்படவுள்ளது.
எனினும் இறைச்சி உண்பதற்கு விரும்பும் நபர்கள் அதனை வௌிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து கொள்ள முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.



