11 வயதுடைய சிறுவன் ஒருவன் வெட்டப்பட்ட புளிய மரம் ஒன்றில் சிக்கி சம்பவிடத்திலேயே உயிரிழந்த சம்பவமொன்று மீகஹகிஹுல-கெசெல்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கந்தகெடிய பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் மீகஹகிஹுல, கெசெல்வத்த கிராமத்தை சேர்ந்த சமித் உதயகுமார என்ற 11 வயதுடைய சிறுவன் ஒருவனே உயிரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் கந்தகெடிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



