இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டார்.
நாடாளுமன்றம் இன்று கூடிய போது, அவர் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



