போக்குவரத்துத்துறை அமைச்சர் காமினி லொக்குகே உரிய நேரத்திற்கு பயணிக்காத ரயில்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளார்.
காலதாமதமின்றி ரயில்களை சேவையில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் நாளாந்தம் சுமார் 400 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், சுமார் மூன்று இலட்சம் பயணிகள் ரயில் சேவையைப் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில், ரயில்கள் தாமதமாகி பயணித்துள்ளதன் விகிதாசாரம் 56 வீதமாக காணப்படுகின்ற அதேவேளை, 2018 ஆம் ஆண்டில் 59 வீதமாக காணப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த விடயங்களை கருத்திற் கொண்டே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.



