வகுருவெல – புத்தல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவர் புதையல் தோண்டிய போது கிடைக்கப்பெற்ற முத்துக்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோனகங்கார பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை வகுருவெல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து 7 முத்துக்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here