தனது ஒரு மாத சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க முடியாது என இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
தான் பெற்றுக்கொண்ட வங்கி கடனொன்றிற்காக தனது மாத சம்பளத்தை ஒதுக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதனால், தனது ஒரு மாத சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களின் ஒரு மாத சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியது.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது ஒரு மாத சம்பளத்தை கொவிட் பணிகளுக்கு ஒதுக்க தீர்மானித்துள்ளனர்.
மேலும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது ஒரு மாத சம்பள பணத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க தீர்மானித்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியிலேயே, தனது ஒரு மாத சம்பளத்தை வழங்க முடியாது என இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.



