முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது 65வது வயதில் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளார்.

கொவிட் தொற்று காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அன்னார் உயிரிழந்துள்ளார்.

மங்கள சமரவீர கடந்த 13ம் திகதி முதல் கொவிட் தொற்று காரணமாக, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நிதி அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட மிக முக்கிய பதவிகளை மங்கள சமரவீர வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here