கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் கடற்படையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கான காரணத்தை கடற்படை பேச்சாளர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களினால் தெரிவு செய்யப்பட்ட கடற்படையினருக்கு PCR பரிசோதனைக்கு உட்படுத்துவதே இந்த அதிகரிப்பிற்கு காரணமாகும்.
தொற்று நோய் பிரிவின் அறிக்கைக்கமைய இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 838ஆகும்.
நேற்றைய தினம் பதிவான கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 31ஆகும்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று கடற்படைக்குள் பரவுவதனை தடுப்பதற்காக கொரோனா தடுப்பின் முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கடற்படை சிப்பாய்களுக்கும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடற்படையில் வைரஸ் தொற்றுக்குள்ளான அதிகாரிகள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரையும் கண்டுபிடித்து PCR பரிசோதனை கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
நாள் ஒன்றுக்கு 100 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கமைய 60 – 70 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுகின்றனர்.
இதன் காரணமாக தொற்றுக்குள்ளாகும் கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.
இந்த புதிய வேலைத்திட்டத்தினுள் அனைவரும் கண்டுபிடிக்கப்படுவார்கள். இந்த மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கை பாரியளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
426 கடற்படையினர் இதுவரையில் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



