இலங்கையில் தொடர்ந்தும் கொரோனா நோயாளிகளின் உயிரிழப்பு பதிவாகிக்கொண்டுள்ளது.

அதன்படி, மேலும் 04 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.

இது தொடர்பான தகவல்களை அரசாங்கம் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

கொழும்பு 14ஐ சேர்ந்த 74 வயது ஆணொருவர்

கொழும்பு 09ஐ சேர்ந்த 57 வயது ஆணொருவர்

அலவத்துகொட பகுதியை சேர்ந்த 23 வயது ஆணொருவர்

நுகேகொடை பகுதியை சேர்ந்த 77 வயது பெண்ணொருவரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 515 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்தவர்களில் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர், கண்டி தேசிய வைத்தியசாலையில் கொரோனா நியூமோனியா மற்றும் குருதி நச்சூட்டதிற்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 08ஆம் திகதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here