யாழில் முன்னணி ஆரம்ப பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தரம் 5 கல்விகற்கும் ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் ஒருவர் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவரது குடும்பத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த மாணவியின் வகுப்பில் 40 மாணவர்கள் கல்வி கற்பதோடு, அவர்களுக்கும் ஆசிரியருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.



