ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, ஹிட்லரைப் போன்ற சர்வாதிகாரியாக விரைவில் மாறுவார் என வடக்கு மாகாண முன்னஅள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் இன்று(13) சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள் அடங்கலாக உள்நாட்டு அமைச்சும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த விக்னேஸ்வரன், “இராணுவப் பிண்ணியிலிருந்து வந்த ஒருவர் ஜனாதிபதியாக வந்தால் அவர் உடனே ஜனநாயகத்துக்கு திரும்பி விடுவார் என்று எதிர்பார்க்க முடியாது.

இராணுவ ஆட்சி என்று கூறாமலேயே ஜனநாயகம் என்ற போர்வையில் இராணுவ ஆட்சியை விதைக்கிறார். ஹிட்லர் கூட முறையாகத் தெரிவு செய்யப்பட்டுத்தான் பதவிக்கு வந்தார்.

அதன் பின்னரே அவர் சர்வாதிகாரியாக மாறினார். கோத்தபாயவும் அதே சர்வாதிகாரத்தை நோக்கித்தான் செல்வார்கள் என நான் நினைக்கின்றேன். அதற்காக நாங்கள் பயந்து விட்டதாக நினைக்க வேண்டாம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here