கந்தகாடு மற்றும் சேனாபுர புனர்வாழ்வு மத்திய நிலையங்களுடன் தொடர்புடையதாக இனங்காணப்பட்ட கொவிட் 19 நோயாளர்களில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிகிச்சையளிக்கும் மற்றும் புனர்வாழ்வளிக்கும் 567 பேர் தற்போதைய நிலையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, குறித்த மத்திய நிலையங்களுடன் தொடர்புடையதாக இனங்காணப்பட்ட 629 கொவிட் 19 தொற்றாளர்களில் 62 பேர் மாத்திரமே தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து குறித்த புனர்வாழ்வு மத்திய நிலையங்களுடன் தொடர்புடையவர்களுக்கு கொவிட் 19 தொற்று வேகமாக பரவத் தொடங்கியது. 

பின்னர், மத்திய நிலையங்களில் இருந்த 508 கைதிகள், அதன் பணியாளர்கள் 72 பேர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் 48 பேர் அடங்களாக 629 பேர் புதிய கொவிட் 19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here