முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் வசித்து வந்த சந்திரசேகரம் அவர்கள், நோயால் பீடிக்கப்பட்ட நிலையில் நேற்றையநாள் (செவ்வாய்கிழைமை) உயிரிழந்துள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான தளபதி பிரிகேடியர் பால்ராஜின் மூத்த சகோதரர் கந்தையா சந்திரசேகரம் உயிரிழந்துள்ளார்.
இந் நிலையில் இன்றையநாள் (புதன்கிழமை) கொக்குத்தொடுவாயில் அமைந்துள்ள, அவருடைய இல்லத்தில் இறுதிக் கிரிகைகள் இடம்பெற்று, பின்னர் கொக்குத்தொடுவாய் இந்துமயானத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
அவரது இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் முன்னாள் வடமாகாணபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் பங்கேற்றிருந்தார்.
மேலும் இவர் தமிழர்களது பூர்வீக பகுதிகளான கொக்கிளாய்,கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி மற்றும் மணலாறுப் பகுதிகளில் இடம்பெறும் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து செயற்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



