நாட்டில் கையடக்க தொலைபேசி பணபரிமாறலை பயன்படுத்தி பண மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கையடக்க தொலைபேசியை அடிப்படையாகக் கொண்ட பணபரிமாறலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் நபர்களை அச்சுறுத்தி கப்பம் பெறுவது தொடர்பில் பொது மக்கள் விழிப்புடனிருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.



