மனித தலையை அடுப்பில் சுட்டு சாப்பிட்டதாக இளைஞர் ஒருவரையும் அவருடன் இருந்த பெண்ணொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் இந்தியாவின் ஆந்திராவில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் உள்ள ரெல்லி வீதியில் சுப்ரமணியம் என்பவர் தனது வீட்டின் அருகே சந்தில் ஒரு கோணிப்பை ஒன்று இருப்பதை பார்த்துள்ளார்.
அதனை பிரித்து பார்த்தப்போது அதில் மனித தலை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் தனது வீட்டிலிருந்தப்படி, அந்த பையை கண்காணித்த போது, அருகேயுள்ள பாழடைந்த வீட்டில் வசிக்கும் ராஜு என்ற இளைஞர் அதனை எடுத்து சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து ராஜு வீட்டின் ஜன்னல் வழியாக சுப்ரமணியம் பார்த்தபோது, மனித தலையை அடுப்பில் சுட்டு ராஜுவும் அவனுடன் இருந்த ஒரு பெண்னும் சாப்பிடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், ராஜுவையும், அவருடன் தங்கி இருந்த பெண்ணையும் பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ராஜுவின் தந்தை இறப்பை தொடர்ந்து, போதை பழக்கங்களுக்கு அடிமையாகி சிறுசிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததும், விசாரணையில் தெரிய வந்தது.
ராஜு அடுப்பில் சுட்டு சாப்பிட்ட மனித தலை மயானத்திலிருந்து கொண்டுவரப்பட்டதா? அல்லது வேறு யாரையாவது கொலை செய்து கொண்டு வந்தார்களா? என்ற கோணத்தில் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



