இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 916 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 9 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இன்றைய தினம் இதுவரை 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 471ஆக காணப்படுகின்றது.



