வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டாளர் ஒருவர் நேற்றிரவு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சுந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ள நிலையிலேயே நிகழ்வு இடம்பெற்ற வீட்டில் காணப்படும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சடலத்தினை மீட்டெடுத்து பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சுந்தபுரம் பகுதியினை சேர்ந்த 34 வயதுடைய நித்தியானந்தம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபரின் தலையின் பின் பகுதியில் இரத்த காயம் காணப்பட்டுள்ளமையினால் இச்சம்பவம் கொலையாக இருக்கலாம் என உயிரிழந்த நபரின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.



