deraa news

புவிசார் மூலோபாய, புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதார வளங்களின் காரணமாக உலக வல்லாதிக்க சக்திகளுடைய நலன்களின் மோதுகையே இலங்கை இலக்கு வைக்கப்படுவதற்கு காரணமாகும் என்றும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது சாத் கட்டாக் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஒவ்வொரு நாடும் தனது ஆட்புல எல்லைக்குள் சமாதானம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமான விடயமாகும். இதனை ஏனைய நாடுகள் உணர்ந்து கொண்டு மதிப்பளிக்க வேண்டும்.

புவிசார் மூலோபாய, புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதார வளங்களின் காரணமாக உலக வல்லாதிக்க சக்திகளுடைய நலன்களின் மோதுகையே இலங்கை இலக்கு வைக்கப்படுவதற்கு காரணமாகும்.

அனைத்து ஜனநாயக நாடுகளிலும் சிறுபான்மை சமூகங்களின் உரித்துக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவற்றின் தனித்துவ கலாசார விடயங்களை சுதந்திரமாக பின்பற்றுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here