கொழும்பு-டேம் வீதியில் பயணப் பொதியொன்றில் இருந்து பெண்ணின் சடலமொன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பயணப்பொதியானது ஹன்வெல்ல பகுதியில் இருந்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், பயணப்பொதியில் தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் சடலம் காணப்பட்ட சமபவம் அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.

26 வயதுடைய பெண்ணின் சடலமானது ஹன்வெல்ல பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையை தனியாக எடுத்துவிட்டு சடலத்தை சூக்கேசில் வைத்து ஹங்வெல்ல பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி கொண்டுவரப்பட்ட பேருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதேவேளை, குறித்த பெண்ணின் சடலம் நேற்று கொழும்பு சட்ட வைத்தியரினால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

சூக்கேசில் இருந்த சடலத்தை நேற்று மாலை வரை அடையாளம் காண முடியவில்லை எனவும், பிரித்து எடுக்கப்பட்ட தலை பையினுள் காணப்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சந்தேக நபர் வேல்லவீதி ஊடக பெண்ணின் சடலத்தை பயணப்பொதியில் வைத்து கொண்டு வரும் காட்சியை சிசிரிவியில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here